அனைத்து உலக நாடுகளும், தற்போதைய நிதி நெருக்கீட்டை, வசதிபடைத்த நாடுகளின் உதவியோடு, இருப்பில் உள்ளதும் சேர்க்கப்படக் கூடியதுமான வளங்களை மையமாகக் கொண்டு சுகாதார சேவைகளை முன்னேற்றுவதற்கான ஒரு நற்தருணமாகக் கருதவேண்டும்.
இவ் முக்கிய தீர்மானமானது, ஜப்பானிய அரசாங்கத்திற்கும், பிரதம மந்திரிக்கும் ஜப்பானின் முன்னாள் சுகாதார சேவை, தொழில் மற்றும் பொதுநலத்துறை அமைச்சுகளின் உப மந்திரி கேஸோடகிமியால் வழிநடத்தப்படும் ஒரு உயர்மட்டக் குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையில் காணப்பட்டது. இவ் டகேமி குழுமம், குறைந்த வருமான நாடுகளின் சுகாதார சேவைகளை முன்னேற்ற வேண்டி G8 நாடுகள் (உலகின் தலைசிறந்த தொழில்மயமாக்கப்பட்ட 8 நாடுகள்) எடுக்கக்கூடிய வழிமுறைகளை முன்வைப்பதற்காக யப்பானிய சர்வதேச பரிவர்த்தனை மையத்திற்குள் (JCIE) நிறுவப்பட்டது. அமெரிக்க மற்றும் ஜப்பானிய உயர்மட்ட சர்வதேச நிபுணர்களினால் தயாரிக்கப்பட்டதும் அனைத்துலக பரிசீலனர், ஆலோசகரால் வழிநடத்தப் பட்டதுமான டகேமி அறிக்கை, சர்வதேச சுகாதார செயற்திட்டம், சுகாதாரத்துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை செய்திகள் மற்றும் சுகாதாரத்துறை நிதி முதலியவற்றை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்களை முன்வைத்துள்ளது.
டகேமி குழுமம், சுகாதார சேவைகளுக்கான நிதி தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக வழமைக்கு மாறாக Institute for Health Policy (IHP) ஐச் சார்ந்த இலங்கை நிபுணர்களை நியமித்துள்ளது. இலங்கையரிடம் நிலவும் சுகாதார சேவை பற்றிய சிறந்த புலமையை மதித்து, சுகாதாரத்துறை நிதி தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கையர்களை நியமித்தமை குறித்து IHP மகிழ்ச்சியடைவதாக அதன் பணிப்பாளர் Dr. ரன்னன் எலிய தெரிவித்தார்.
Dr. ரன்னன் எலிய மேலும் தெரிவிக்கையில் “இலங்கையில் சுகாதார சேவைகளுக்காக நிதி ஒதுக்கிடுவது ஒரு முக்கியமான பிரச்சினையாக நிலவி வருகிறது. சிறந்த செயற்திட்டங்கள் இருந்தாலன்றி, சுகாதார சேவை சுமுகமாக பெறப்படுவதும் வறிய மக்கள் வைத்திய வசதிகளை அணுகுவதும் கடினமான விடயமாகும். ஒரு நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் பொது நிதியம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது. இப்பொது நிதியம் வரிகளாகவோ (இலங்கை) சமூக, சுகாதார காப்புறுதியாகவோ (ஜப்பான்) இருக்கக்கூடும். இக்கொள்கையை ஆமோதித்து சுகாதார சேவைகளை முன்னெடுக்க விரும்பும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு உதவுமாறு G8 நாடுகளைப் பரிந்துரைத்துள்ளோம். G8 நாடுகளின் இவ்வுதவி, 50 வருடங்களுக்கு முன்னரே சுகாதார சேவை கட்டண முறையை நீக்கிய இலங்கையைப் போன்று இலவச அரசாங்க வைத்திய சேவைகளை ஆரம்பிக்க விரும்பும் நாடுகளுக்கான உதவிகளையும் உள்ளடக்கும்.”
நிதி நெருக்கடியானது, சுகாதார சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் என மக்கள் வருந்தினாலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) உலக நாடுகள் அனைத்தையும் சுகாதாரத்துறை சார்ந்த செலவினங்களை அதிகரிக்குமாறு கூறியுள்ளதாக டகேமி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்து வரும் இவ்வேளையில், பல நாடுகளும் சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்ய மேலும் முன்வருவதாக Dr. ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார். “இதனையே தற்போது அமெரிக்காவில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதிபர் ஒபாமாவின் கொள்கைகள் சிறந்த சுகாதார சேவைகளுக்கு பொது நிதியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் என நம்புகிறோம்” என Dr. ரன்னன் எலிய கருத்து தெரிவித்துள்ளார்.
டகேமி அறிக்கையானது, அடுத்த G8 மாநாட்டைத் தலைமை தாங்கும் இத்தாலிய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும். இத்தாலிய தீவான லா மடலீனாவில் ஜூலை மாதம் இடம்பெறவிருக்கும் 2009 க்கான G8 மாநாட்டில் டகேமி அறிக்கை செல்வாக்கு செலுத்தும் என நம்பப்படுகிறது. Dr. ரன்னன் எலிய மேலும் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை போன்ற நாடுகளின் பாரம்பரியமற்ற கருத்துக்களை, யப்பானிய பிரதம மந்திரிக்கும், G8 குழுமத்துக்குமான பரிந்துரை வளர்ச்சியில் வெளிப்படையாகச் சேர்த்துக் கொண்டமையும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் இணைந்து, அந்நாட்டு மக்களின் சுகாதார முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும் என்ற அவர்களது உறுதிப்பாடும் எம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.
பதிப்பாளர்களுக்கு:
- மேலதிக தகவல்கள் மற்றும் நேர்முகங்களுக்கு, IHPயின் ஊடக அலுவலகத்தை (001)2314041/2/3 யில் தொடர்பு கொள்ளலாம்.
- இணையதளத்தில் டகேமி அறிக்கையைப் பார்வையிடJCIE website
- மேலதிக தகவல்கள் IHP website
- G8 குழுமம் (அபிவிருத்தி அடைந்த 8 நாடுகள்: கனடா, ப்ரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது) வருடாந்தம் G8 உச்சிமாநாட்டை நடத்தி வருகிறது. கடந்த வருடம் ஜப்பானிய அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட G8 மாநாடு இவ்வருடம் இத்தாலிய அரசாங்கத்தால் தலைமை தாங்கப்படுகிறது.
- டகேமி அறிக்கையின் முன்னாக்கம், ஜனவரி மாதத்தில் லன்சட்டில், மாகரட் சன் (WHO – DG) அவர்களின் விளக்க உரையுடன் வெளியாகியது. (மேலதிக விபரங்கள்:)The Lancet
|